அமீத்ஷாவின் மகனுடைய ஊழலில் தொடங்கிப் பா.ஜ.க.வின் ஊழலும் முறைகேடுகளும் நடுவணரசின் பொருளாதாரப் பின்னடைவுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுள்ளன.
பண மதிப்பு நீக்கம், அபரிமிதமான GST, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், ஹிந்தி - சம்ஸ்கிருதத் திணிப்பு, ஏழை எளிய மக்களுக்கான மானியம் ரத்து, கார்ப்பரேட்டுகளின்
பல லட்சம் கோடி கடன்கள் ரத்து,
ஏழை விவசாயிகளின் அற்ப சொற்பக் கடன்களுக்காக ஜப்தி, எதிர்கட்சிகளை உடைத்தல், தமக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க முயலுதல் - போன்றவை பா.ஜ.க.வின் அன்றாட அஜண்டாவாக உள்ளன.
பா.ஜ.க. அரசின் பொருளாதாரத் தோல்வி குறித்தும், அலங்கோல ஆட்சி குறித்தும் எதிர்க்கட்சிகளும், மக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
இப்போது சிவசேனா உள்ளிட்ட அவர்களின் தோழமைக்கட்சிகளும், யஷ்வந்த் சின்ஹா, துக்ளக் குருமூர்த்தி, சத்ருகன் சின்ஹா, சுப்பிரமணியன் சுவாமி - போன்ற பா.ஜ.க. தலைவர்களுமே எதிர்த்துக் குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நியாயமாகத் தேர்தல் நடந்தால், பா.ஜ.க. வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தச்
சூழலை எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக எப்படிச் சந்திக்கப் போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நாட்டின் எதிர்காலமும் மக்களின் விடிவும் அமையுமா ?