வரலாற்றுக்கு முந்தைய காலம்[தொகு]

பழைய கற்காலம்[தொகு]

தமிழ்நாட்டின் பகுதிகளில் பழங்கற்கால குடியிருப்புகள் இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியானது கி.மு 500,000 ஆண்டிலிருந்து கி.மு 3000 ஆண்டு வரை நீடித்திருந்ததாக மதிப்பிடப்படுகிறது.[1] பழங்கற்காலத்தின் பெரும்பாலான காலகட்டங்களில் இப்பகுதியில், அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகள் அல்லது புல்வெளி சார்ந்த சுற்றுச்சூழலில் அமைந்த ஆற்றுப் பள்ளதாக்குகளுக்கு அருகிலேயே மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதிகளில் மக்கட்தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருந்தது ஆகையால் தென்னிந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே தொடக்க பழங்கற்கால கலாச்சாரம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையின்வடமேற்கு பகுதியில் உள்ள அத்திரம்பாக்கம் பள்ளதாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும்.[2]தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவை கி.மு 300,000 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.[3] தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ்(Homo erectus) இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இவர்கள் கைக்கோடரி மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர்.[4]
50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் (ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ் ) மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலும், பல்வேறு கற்களைப் பயன்படுத்தி தகடு போன்ற கருவிகள் மற்றும் மெல்லிய நுண்தகடு கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்தியிருந்தனர். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவார்ட்ஸ் கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற்கள் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். 1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[5] நுண்கற்கள் காலமானது கி.மு 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.[6]

புதிய கற்காலம்[தொகு]

தமிழ்நாட்டில் சுமார் கி.மு 2500 ஆண்டு புதிய கற்காலம் தொடங்கியது. சாணைபிடித்தல் மற்றும் மெருகேற்றல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் கற்கருவிகளுக்கு நயமான வடிவம் அளித்தனர். பண்டைய எழுத்துக்களைக் கொண்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரியின் மேற்பகுதி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[7] புதிய கற்கால மனிதர்கள் பெரும்பாலும் சிறிய சமதளமான மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில், சிறிய, ஏறத்தாழ நிரந்தரமான குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மேய்ச்சல் காரணங்களுக்காக அவ்வப்போது அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தனர். அவர்கள் இறந்தவர்களை பள்ளங்கள் அல்லது புதைகலங்களில் புதைத்து சடங்குகளை முறையாகச் செய்தனர். அவர்கள் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்க தாமிரத்தைப் பயன்படுத்தவும் தொடங்கினர்.

இரும்புக் காலம்[தொகு]

இரும்பைப் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வடிவமைக்கும் முறையை மனிதர்கள் இரும்புக் காலத்தின் போது தொடங்கினர். பல நூறு இடங்களில் காணப்படும் பெருங்கற்களாலான இடுகாடுகளைக் கொண்டு தீபகற்ப இந்தியாவில் இரும்புக் காலக் கலாச்சாரம் இருந்ததை அறிய முடிகிறது.[8] இடுகாடு நினைவுச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு மற்றும் அவற்றின் வகைகளைக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இரும்புக் கால குடியேற்றங்கள் பரவியதாகத் தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளை ஒப்பிடும் போது பெருங்கற்களாலான குடியேற்றங்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.[9]
சுமார் கி.மு 1000 வது ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்களாலான புதைகல இடுகாடுகள் இருந்ததற்கான தெளிவான முற்கால ஆதாரங்கள் இடுகாடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன, குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பூமியிலிருந்து 157 புதைகலங்களை அகழ்ந்தெடுத்தனர். அவற்றில் 15 கலங்களில் மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் மற்றும் மற்றும் எலும்புகள், உமி, அரிசி தானியங்கள், கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடரிக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகலத்தில் எழுத்தப்பட்ட எழுத்துகள், 2800 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தின் தமிழ்-பிராமி வரிவடிவத்தை ஒத்திருப்பதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[10] தொடர்ந்து அகழ்வாய்வு சோதனைகளை மேற்கொள்ளுவதற்கான தொல்லியல் களமாக ஆதிச்சநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது.[11][12]
தற்போதைய பொதுவான காலத்திற்கு முந்தைய தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிய குறிப்புகள், கி.மு 300 ஆண்டைச் சேர்ந்த அசோகரின் சாசனத்திலும் கி.மு 150 ஆண்டைச் சேர்ந்த கதிகும்பா கல்வெட்டிலும் (ஓரளவு) கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பழைய வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ் நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அதில் பாண்டிய நாட்டிலிருந்து களப்பிரர்களை வெளியேற்றிய பாண்டிய அரசன் கடுங்கோன் (c.560–590 CE) என்பவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது - நீலகண்ட சாத்திரி, தென்னிந்தியாவின் வரலாறு பக்கம் 105, 137

0 comments: